
பள்ளிக் கல்வித் துறை பரபரப்பான அறிவிப்பு.
அரையாண்டுத் தேர்வுகள் நடக்குமா?
- By --
- Friday, 22 Nov, 2024
தமிழகம் எங்கும் பருவமழை பரவலாக பெய்து வருகின்ற நிலையில்...... அடுத்த மாதம் நடைபெறக்கூடிய அரையாண்டு தேர்வுகளுக்காக மாணவ மாணவியர்கள் தயாராகி வருகிறார்கள். ஆனாலும், பருவ மழை அடுத்த மாதமும் வந்து நம் கதவைத் தட்டுமா? எனத் தெரியவில்லை.
இந்த சூழலில்..
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை பள்ளிகளுக்கான அரையாண்டு தேர்வுகளின் செய்திகளை இன்று அறிவித்துள்ளது.
1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகளுக்கு டிசம்பர் 16ஆம் தேதி அரையாண்டுத் தேர்வுகள் தொடங்குகிறது. ஒரு வார காலம் நடைபெறும் இந்த தேர்வுகள் டிசம்பர் 23ஆம் தேதி முடிவடைகிறது. டிசம்பர் 24ஆம் தேதி லிருந்து அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்படுகிறது.
டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்மஸ் விடுமுறையும், ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு விடுமுறையும் இதில் அடங்கும். ஜனவரி 2 ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.
பள்ளிகள் திறக்கப்பட்ட அதே நாளில் மூன்றாம் பருவத்திற்கான பாடங்கள் தொடங்கிவிடும். எனவே, அதற்கான பாடப் புத்தகங்களும் அன்றே வழங்கப்பட்டு விடும்.
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை இந்த அறிக்கை வெளியிட்டுள்ளது.
கிள்ளியூர் எழில்- சென்னை