
மேற்கு மாவட்ட வேலை வாய்ப்பு
12- ஆம் வகுப்பு முடித்திருந்தாலே போதும்
- By --
- Saturday, 09 Nov, 2024
திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Social Worker, Accountant, Outreach Worker பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
காலிப்பணியிடங்கள்:
Social Worker, Accountant, Outreach Worker பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு / B.Com / B.Sc / BA தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் Research Associate வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!
ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.18,536/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.11.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
@ZEBRA Media