
இனி சிகிச்சைகள் மேம்படும்
பாம்புக் கடி - இனி அறிவிக்கப்பட்ட நோய்
- By --
- Saturday, 09 Nov, 2024
பாம்புக் கடியை அறிவிக்கப்பட்ட நோயாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவ மனைகளில் பாம்பு கடிக்கு போதிய மருந்துகள் இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு;
இதற்கு பதில் அளித்து பேசிய தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா. பாலசுப்ரமணியம் "பாம்பு கடியை" அறிவிக்கப்பட்ட நோயாக தமிழ்நாடு அரசு அறிவிக்கிறது. இனி வரும் நாட்களில், மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் பாம்பு கடி பற்றிய சிகிச்சை விபரங்களை, உயிரிழப்பு விபரங்களை அரசுக்கு உடனே தெரிவிக்க வேண்டும். சேகரிக்கப்பட்ட விபரங்களை கணக்கில் கொண்டு தமிழ்நாடு முழுக்க உள்ள அரசு மருத்துவமனைகளில் பாம்பு கடிக்கு ஏற்ற சிகிச்சைக்கான உள்கட்டமைப்புகள் வலிமைப்படுத்தப்படும். போலவே, தனியார் மருத்துவமனைகளிலும் இதே போன்ற கட்டமைப்புகளை உருவாக்க வலியுறுத்தப்படும். இனி பாம்புக் கடிக்கான சிகிச்சைகள் மேம்படும்.
இந்த புதிய கட்டமைப்புகள் பற்றிய விபரங்களை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்கள் விபரம் கேட்டு விழிப்புணர்வு பெற்றிடுக.
கிள்ளியூர் இளஞ்செழியன்