
சர்வ தேச இந்தியன்
அபூர்வ கலாம் ஆஸாத்
- By --
- Monday, 11 Nov, 2024
மைய நீரோட்டத்தை கட்டியெழுப்பிய
கல்வி அமைச்சர் & மார்க்க அறிஞர்.
சமூகப் பொது வெளி,
அரசியல் வெளி,
கல்வி மற்றும் கலாச்சார வெளி - என, சகலத் துறைகளிலுமே தம்மைத் தாமே தனிமைப் படுத்திக் கொண்டுள்ள இன்றைய இந்திய இஸ்லாமியர்களுக்கு மிக, மிகத் தேவையான ஒரு முன் மாதிரி ஆளுமை தான்,
*"பாரத ரத்னா" மௌலானா அபுல்கலாம் ஆசாத்* அவர்கள்.
இந்தியாவின் முதல் பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேருவின் சம வயதுடைய அரசியல் ஆளுமையான இவர் 1888- ஆம் ஆண்டில் மக்காவில் பிறந்தவர். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதை நிரூபிக்கும் வகையில், தனது பத்தாவது வயதிலேயே இறைவனின் திருமறையை ஓதி மனனம் செய்து மார்க்கத்தை அறியத் தொடங்கினார். அதன் பின்
தனது 17- ஆம் வயதில் கெய்ரோவில் உள்ள அல்- அஜ்ஹர் பல்கலைக் கழகத்தில் இணைந்து பட்டமேற்படிப்பை மேற்கொண்டார்.
????
அதன் பின்பு, அவரின் குடும்பம் தனது பூர்வீகமான வங்க தேசத்திற்கு திரும்பியது. அப்போது 1905- ஆம் ஆண்டில் ஏற்பட்ட வங்கப் பிரிவினையானது இவரை இந்திய அரசியலுக்குள் இழுத்துக் கொண்டது.
இதன் வழியாக பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு தேசப் பணியாற்றிய விட்டு 1920- ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி மற்றும் திலகர் முன்னிலையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அங்கு தான் தன்னுடைய பிரதிபலிப்பாகவே காட்சி அளித்த நேருவை அடையாளம் கண்டு கொண்டார். அதன் பின்பு அவரின் அரசியல் பயணம் உச்சத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தது. தனது 35- ஆம் வயதிலேயே காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவரானார். அதிலும், அக்கட்சி அவரை தொடர்ந்து மூன்று முறை கட்சித் தலைவராக தேர்ந்தெடுத்து கௌரவித்தது. பின்பு அவரையே நான்காவது முறையாக தலைவராக தேர்ந்தெடுத்த போது அதை அவர் மறுத்து விட்டார். தகுதியான அடுத்தவருக்கு அப்பதவியை விட்டுக் கொடுத்து தன்னை ஒரு அப்பழுக்கற்ற ஜனநாயகவாதியாக வெளிப்படுத்தினார்.
????
1946- ஆம் ஆண்டுகளில் தேசம் எங்கும் பரவி இந்து- முஸ்லீம் இனக் கலவரத்தின் போது அதற்கு எதிராக உண்ணா விரதம் இருந்தார். இந்திய இஸ்லாமியர்களை காங்கிரஸ் கட்சியில் வந்து இணைந்து கொண்டு தேசப் பணியாற்ற அறைகூவல் விடுத்தார். இந்திய இஸ்லாமியர்களுக்கு தனி அரசியல் அடையாளம் இருப்பதை விடவும், மைய நீரோட்ட அரசியல் அடையாளம் தான் பாதுகாப்பானது என்பதை நன்கு உணர்ந்து இருந்தார். மேலும், அவர்களுக்கு எதிராக பின்னப்பட்டு வருகின்ற இந்துத்துவா அரசியலை வலுவிழக்கச் செய்ய இதுதான் சிறந்த வழி என்பதை தீர்க்க தரிசனத்துடன் உணரந்து இருந்தார். இதன் காரணமாகவே, அவர் காங்கிரஸ் கட்சியிலேயே இன்னும் தீவிரமாக களமாடத் தொடங்கினார். இதன் வழியாக இந்திய இஸ்லாமியர்களை மைய நீரோட்ட அரசியலை நோக்கி வெகு வேகமாக ஈர்க்கத் தொடங்கினார்.
இந்திய தேசம் விடுதலை அடைந்த பின்பு, தேசத்தை மறு கட்டமைப்புச் செய்ய வேண்டிய வேலைகளில் நேரு, பட்டேல், காமராசர் போன்ற முன் வரிசைத் தலைவர்களுடன் தோளோடு தோள் நின்று தேசப் பணியாற்றினார். இவருடைய கல்வி அறிவு, பொது நோக்கு, தீவிர களப் பணி, பன் மொழிப் புலமை, பன்முகத் தன்மை கொண்ட பண்பாட்டு மனோபாவம் - போன்ற பல அடிப்படையான தகுதிகள் எல்லாம் கை கோர்த்து நின்று இவரை சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக உயர்த்திப் பிடித்தது. அவருடைய ஆன்மத் துடிப்பிற்கு ஏற்ற உயர் பதவியை பெற்ற அவர் , அதை வெறும் அலங்காரப் பதவியாக மட்டும் நிறுத்தி விடாமல், அதனை பல்வேறு கோணங்களிலும் சுழல விட்டார்.
????
1947 முதல் 1958 வரை அவர் இந்தப் பதவியில்
இருந்த போது செய்த தேசப் பணிகளின் பட்டியல்.
????
சாகித்திய அகாடமி (1954), லலித் கலா அகாடமி (1954), கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் உள்ளிட்ட பல பிரபல அமைப்புகளை ஆசாத் உருவாக்கினார்.
????
ஆங்கிலேய ஆட்சியில் இந்திய கல்வியில் கலாச்சாரம் தொடர்பான அம்சங்கள் குறைவாக இருந்ததை உணர்ந்த அவர், அவற்றை வலுப்படுத்தும் முயற்சிகளில் இறங்கினார்.
????
கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியத்தின் தலைவராக இருந்த ஆசாத், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட மத்திய மாநில கல்வி முறைகளில் சீர்திருத்தங்கள் செய்ய பரிந்துரைத்தார்.
இலவச கட்டாய கல்விக்கு குரள் கொடுத்த முஸ்லிம் மாமேதை
????
14 வயது வரை அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
????
பெண் கல்வி, தொழிற் பயிற்சி, வேளாண் கல்வி, தொழில்நுட்ப கல்வி உள்ளிட்ட பல சீர்திருத்தங்களை பரிந்துரைத்தார்.
????
பல்கலைக் கழகங்களுக்கு கல்வித் துறை சார்ந்த பணிகள் மட்டுமல்லாமல் சமூகப் பொறுப்பும் உள்ளது என்று கூறினார். வயது வந்தோருக்கான கல்வித் துறையில் ஆசாத் ஒரு முன்னோடியாக இருந்தார்.
????
உருது, பார்சி, அரபு மொழிகளை கற்றுத் தேர்ந்தவராக இருந்தாலும் தேசிய மற்றும் சர்வதேச தேவைகளை முன்னிட்டு ஆங்கில மொழியை தொடர்ந்து பயன்படுத்தச் செய்தவர் ஆசாத்.
????
ஆரம்பக் கல்வி தாய் மொழியிலேயே இருக்க வேண்டும் என்றார். தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சிலை வலுவான அமைப்பாக மாற்றினார்.
????
1951இல் காரக்பூரில் இந்திய தொழில்நுட்ப பயிலகம் (ஐஐடி) அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பம்பாய், சென்னை, கான்பூர், தில்லி ஆகிய நகரங்களிலும் ஐ.ஐ.டி.கள் அமைத்தார். அதன் பின்பு, கட்டிடக்கலைக்கான சிறப்பான பல்கலைக் கழகத்தை 1955- ஆம் ஆண்டில் தில்லியில் நிறுவினார்.
????
இவ்வாறு, பல் வேறு வடிவங்களில் இந்த தேசத்தை மறு கட்டமைப்பு செய்த ஆசாத் அவர்களை இந்திய கல்வி அமைச்சகம் இன்று வரை நன்றியுடன் நினைவு கூர்ந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாகவே, அன்னாரின் பிறந்த தினத்தை இந்தியாவின் தேசிய கல்வி தினமாக கொண்டாடி வருகிறது. மேலும், அவருடைய சமயப் பணியை சிரமேற் கொண்டு மதிக்கும் வகையில், அவர் பார்சி மொழியில் மொழி பெயர்த்த முழுக் குர் ஆன் வேதத்தையும் ஆறு தொகுதிகளாக பிரித்து அதனை சாகித்ய அகாடமி நிறுவனம் 1977- ஆம் ஆண்டில், ஒரு தரமான தொகுப்பாக வெளியிட்டு மகிழ்ந்தது.
????
இன்றைய மதவாத அரசியல் சூழலில், அபுல் கலாம் ஆசாத் போன்ற பன்முகத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள் தான் நமக்கு மிகச்சிறந்த வழிகாட்டியாக இருக்க முடியும். இது தான் இன்றைய கள எதார்த்தமாகவும் உள்ளது.
????
*வண்ணப்பலகை*
(11, நவம்பர், 2018)
*தேசிய கல்வி தினம்*
????????????????????????????????????