1000898414

தாவரவியல் தாய்

நவம்பர் 04: 
இயற்கையை நேசித்த பேராசிரியர் ஜானகி அம்மாள் பிறந்த தினம் இன்று.

கேரள மாநிலம், தலச்சேரியைச் சேர்ந்த ஜானகி அம்மாள், சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் தாவரவியல் பேராசிரியையாகப் பணியாற்றியவர். கோயம்புத்தூரில் 1930-ல் கரும்பு, மூங்கில் ஆகியவற்றின் மரபணு ஆராய்ச்சியில் இவரது பங்களிப்பு சிறப்பாக இருந்தது. 1935-ல் இந்திய அறிவியல் கல்விக்கழகத்தின் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். இளம் மாணவர்களையும் அறிவாளிகளையும் ஊக்கப்படுத்த , 1999-ல் ஜானகி அம்மாள் விருது உருவாக்கப்பட்டது.
இந்தியாவின் முதல் பெண் தாவரவியலாளர் என்று அடிக்கடி வர்ணிக்கப்படும் கேரளாவில் பிறந்த விஞ்ஞானி ஈ.கே.ஜானகி அம்மாளின் வாழ்க்கை மற்றும் குறிப்பிடத்தக்க சாதனைகள் இப்போது ஒரு முன்னாள் பள்ளி ஆசிரியர் எழுதிய 400 பக்க புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளன.

நவம்பர் 4, 1897 இல், தலச்சேரியில் பிறந்த எடவலத் கக்கட் ஜானகி அம்மாள், சைட்டோஜெனெடிக்ஸ் மற்றும் தாவர இனப்பெருக்கம் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க பணிகளைச் செய்து, அறிவியல் உலகத்தால் மிகவும் மதிக்கப்படுகிறார். 

By :வைகை சுரேஷ் 


Comment As:

Comment (0)