
காமராஜர் வழியில் கலைஞர்
கோடு போட்டவரும், ரோடு போட்டவரும்
- By --
- Saturday, 09 Nov, 2024
கோடு போட்டவரும், ரோடு போட்டவரும்
????????♂️சிப்காட் என்பது மிகப் பெரிய தொழிற்பேட்டை. தமிழ் நாட்டில் 21 இடங்களில் உள்ளது. இது போன்ற தொழிற்பேட்டைகளுக்கு முன்னாள் முதலமைச்சர் கு.காமராஜ் அவர்கள் தான் தமிழ் நாட்டில் வித்திட்டார். 1958- ஆம் ஆண்டு சென்னை கிண்டி தொழிற்பேட்டையையும், 1963- ல் அம்பத்தூர் எஸ்டேட் என்ற தொழிற் பேட்டையையும் உருவாக்கினார்.
தமிழ் நாட்டில் இரண்டு இடங்களில் மட்டுமே இருந்த இது போன்ற தொழிற்பேட்டைகளை இரண்டு வகையான தொழிற்பேட்டைகளாக முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி 1971- ஆம் ஆண்டுகளில் தமிழ் நாடு முழுக்க உருவாக்கினார்.
சிப்காட் என்ற பெரிய அளவிலான தொழிற் பேட்டைகளை 21- இடங்களிலும்,
சிட்கோ என்ற சிறிய அளவிலான தொழிற் பேட்டைகளை 120 இடங்களிலும் உருவாக்கினார்.
இந்த இரண்டு வகையான தொ.பே. களை முன் வைத்து சிறியதும், பெரியதுமான நிறைய தனியார் தொ.கூடங்கள் தமிழ் நாட்டில் உருவாகின.
இது தான் திராவிட மாடல் வளர்ச்சியின் விளைவுகள் என்பது.
கோடு போட்டவர் காமராஜர். அதில் ரோடு போட்டவர் கலைஞர்.
????
வண்ணப்பலகை*
( 09, நவம்பர், 2024)