
அடிப்படை உரிமையை நோக்கி....
தெலுங்கானாவில் சாதிவாரிக் கணக்கெடுப்பபு
- By --
- Sunday, 10 Nov, 2024
தெலுங்கானா மாநிலத்தில் நவம்பர் 9ஆம் தேதி முதல் சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது. 80 ஆயிரம் பணியாளர்கள் 33 மாவட்டங்களில் உள்ள ஒரு கோடியே 17 லட்சம் குடும்பங்களில் இந்த கணக்கெடுப்பு பணிகளை நடத்த உள்ளார்கள்.
தெலுங்கானா மாநிலத்தில் 1931 ஆம் ஆண்டுக்குப் பிறகு, முதல் முறையாக இந்த சாதிவாரி கணக்கு எடு்ப்பு எடுக்கப்படுகிறது. எனவே இது ஒரு வரலாற்றுத் தருணம் என சமூக அரசியல் நோக்கர்கள் வர்ணிக்கிறார்கள். சாதிவாரி கணக்கெடுப்பு என்பது டாக்டர் அம்பேத்கரின் நெடுங்காலக் கனவு. இந்திய அரசியலமைப்புச் சட்டம் நமக்கு கொடுத்துள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்று. எனவே தான் தனது தேர்தல் அறிக்கையில் இதற்காக சிறப்பு வாக்குறுதி தந்து ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சி இந்த ஜாதி வாரி கணக்கெடுப்பை நிறைவேற்றத் துணிந்துள்ளது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் கூறினார்.
இந்தியாவின் ஓரிரு மாநிலங்களில் மட்டுமே இந்த கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளதால், தெலுங்கானாவில் நடத்தப்படும் இந்த கணக்கெடுப்பு ஒட்டு மொத்த இந்திய அரசியல் களத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த கணக்கெடுப்புகள் நவம்பர் 30ஆம் தேதி பூரணமாக முடிந்து விடும் அதற்குப் பிறகு வரக்கூடிய அறிக்கைகள் இந்திய அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கும்
ஷரீப். அஸ்கர் அலி - எடிட்டர்.