
சிறிய அசைவுகள் - பாரிய மாற்றங்கள்
பூமியைப் புரட்டும் வித்தைக்காரன்.
- By --
- Monday, 25 Nov, 2024
தோழர் சுல்தான் அகமது் இஸ்மாயில் உலக மண்புழுக் கழகத்தின் துணைத் தலைவர்! ஐயா அவர்களின் மண்புழுத் தாத்தாவின் மண்நலப் புரட்சிப்பாதை நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட மகிழ்வான தருணங்கள்!
இடம்: திருக்கழுக்குன்றம் தமிழ் நிலம் தமிழ்ப் பண்ணை வேளாண் சுற்றுலா நடுவம்
உழவன் அறக்கட்டளை நிறுவனர், தமிழ்த் திரைப்பட நடிகர் கார்த்தி சிவகுமார், கலந்து கொண்டு இந்நூலை வெளியிட்டு வாழ்த்திப் பேசினார்!
இந்த நிகழ்வு இயற்கை வழி வேளாண்மை செய்யும் அனைவருக்கும் மிகவும் முக்கியமான நிகழ்வு!
தோழர் சுல்தான் அகமது இஸ்மாயில் தமிழ்நாடு அரசின் திட்டக் குழுவில் இடம் பெற்றுள்ள அறிஞர்!
கற்றறிந்த அறிஞர்கள் பலரும் இயற்கை உழவாண்மை அறிவியல் மற்றும் வளர்ச்சிக்கு எதிரானது என்று தொடர்ந்து நிறுவ முயற்சி செய்கின்றனர். விவசாயத்தில் லாபம் இல்லை என்றால் விவசாயத்தை விட்டு வெளியேறுங்கள் என்றும் அறிவுறுத்துகின்றனர்!
மாறாக முனைவர் சுல்தான் அகமது இஸ்மாயில் அவர்கள் சூழலுக்காக அயராது உழைத்து வரும் மாமனிதர்! இயற்கை விவசாயம் செய்து வரும் உழவர் தோழர்களுக்கு ஒளிவிளக்காக வழிகாட்டுகிறார்!
இவரது பண்பு நலன்கள் பற்றி எழுத இந்தப் பதிவு போதாது. அவரே அவரது "workography" (இந்தப் பதம் நேற்று நாங்கள் ஐயாவிடம் புதிதாகக் கற்றுக் கொண்டோம்) நூல் வெளியிட்டது போல் புதிதாக ஒரு புத்தகம் போட வேண்டும். அந்த அளவுக்கு எளிமையான மனிதர்!
அத்துணை சிறப்புகள் பெற்ற மாமனிதர் தன் 73 வயதிலும் நேற்று காலை முதல் மாலை வரையில் அனைவரிடமும் சிரித்துப் பேசிக் கொண்டும் ஓயாமல் நடந்து கொண்டும் அவையை நிறையச் செய்தார். தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் இருந்தும் சூழல் ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
இத்துணை சிறப்பு வாய்ந்த இந்த விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பளித்த தோழர் இறையழகன் அவர்களுக்கு எங்கள் அன்பு!
நம்மாழ்வார் நம்முடன் இன்னும் வாழ்கிறார் என்பதை தமிழ் நிலம் தமிழ்ப் பண்ணை நிகழ்வில் நேற்று உணர்ந்தேன்!
சூழல் சார்ந்த உணர்வுகள் நிறைந்த மகள்களைப் பெற்று வளர்த்துள்ளீர்கள் தோழர் இறையழகன்! மண்புழுக்கள் சார்பாக உங்கள் அனைவருக்கும் எங்கள் அன்பு!
தமிழ் நிலம் தமிழ்ப் பண்ணை எங்கள் சொந்த இடமாகத் தோற்றம் அளிப்பது எனக்கு மட்டும் அல்ல. அங்கு வந்திருந்த பலரும் இதே கருத்தைத் தெரிவித்தனர்.
சரோஜாக் குமார் - நந்தவனத் தோட்டம் / பள்ளபட்டி