
ஒரு மணி நேரத்தில்.....
- By --
- Sunday, 03 Nov, 2024
இந்த பஸ்ஸை நன்றாக கவனித்தீர்கள் என்றால் ஒரு விஷயம் புலப்படும்! 1980 காலகட்டத்திலேயே எக்ஸ்பிரஸ் பஸ் விட்ட ஒரே பஸ் கம்பெனி நல்ல மணி டிரான்ஸ்போர்ட் தான்!
சரியாக ஒரு மணி நேரத்தில் 70 கிலோமீட்டர் கடந்து விடுவார்கள்!
இன்றைக்கும் அதே ஒரு மணி நேரத்தில் தரமான சேவை தருகிறார்கள்!
வாழ்த்துக்கள்
நல்லமணி!78 ல் முதன் முதலாக டேப் ரெக்கார்டு பொருத்திய பஸ் !
யாரும் பயந்து முன் இருக்கைகளில் இருக்க சற்று தயக்கமாகவே இருக்கும். போகும் வேகம் அப்படி...
ஒரு விசயத்தை கவனிக்க வேண்டும் நல்லமணி பஸ் பொருத்தமட்டில் அதன் பதிவு எண்ணை எப்படி கூட்டினாலும் 9 தான் வரும் அந்த காலகட்டத்தில்
மதுரை டூ திண்டுக்கல் பயணநேரம் ஒருமணிநேரம்
என நிா்னயம்பன்னியது நல்லமணியே .
திருமணம் பேச போகிறவர்கள் நல்ல மணியைத்தான் விரும்வார்கள். ராசி அப்படி.
நல்லமணி பஸ்ஸில் முதன் முதலில் மதுரை - திண்டுக்கல் வீடியோ பஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. பெண் கண்டக்டர் அறிமுகப்படுத்திய பெருமையும் நல்லமணி டிரான்ஸ்போர்ட்க்கே சேரும்.வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.,.
தற்போது உள்ள அரசு பேருந்துகள் 70 கிலோ மீட்டர் செல்வதற்கு 2மணிநேரம் முதல் இரண்டரை மணிநேரம் ஆகிறது.