
புதிய ஜனநாயக வெளி
உடைபடும் கள்ள மௌனங்கள்
- By --
- Wednesday, 06 Nov, 2024
பாலஸ்தீன் மீதான இஸ்ரேலின் அத்து மீறிய வன்முறை கட்டவிழ்ப்புகளை ( அது போர் அல்ல ) மேற்கத்திய அரசுகளும், மேற்கத்திய ஊடகங்களும் எவ்வாறு எதிர் கொண்டன என்பதை சராசரியான சிவில் சமூகம் கூர்ந்து கவனித்துக் கொண்டுதானிருக்கிறது.
மனித நேயம், சமூக ஒழுங்கு, ஜனநாயக விழுமியங்கள், தனி மனித உரிமை, பெண்ணியம் - என பல்வேறு ஜானர்களில் பேசிய ஊடகங்கள் எல்லாம், இந்த சியோனிஸ ஏகாதிபத்தியத்தின் முன்னே தன் வாலைச் சுருட்டிக் கொண்டு, உண்மைக்கு மாறான பொய்களைப் பரப்பியதையும், அநியாயங்களுக்கு துணை போனதையும் மக்கள் கூர்ந்து கவனித்து தான் வருகிறார்கள். இந்த அவதானிப்பின் வழியாக, இது வரையி்லும் உலக பெரு ஊடக நிறுவனங்கள் சொன்னதை எல்லாம் மக்கள் பகுப்பாய்வு செய்யத் தொடங்கி விட்டார்கள். அதற்கு சமூகவலை தளங்களை முன்னை விடவும் கூர்மையாக பயன்படுத்தி வருகிறார்கள். செய்திப் பறிமாற்றம் என்பது உலக அளவில் மாறுதலுக்கு உட்பட்டு வருவதை நன்றாகவே உணர முடிகிறது.
அதாவது, பெரு ஊடகத்திலிருந்து - சமூக ஊடகத்திற்கு என மிகப் பெரிய மாறுதலடைந்து வருகிறது.
இதுவும் ஒரு ஜனநாயகப் படுத்துதல்தான்.
@ வண்ணப்பலகை
( 06, நவம்பர், 2024 )