
கசக்கும் விலை உயர்வு
ஆனந்தம் பொங்கலையே!
- By --
- Friday, 08 Nov, 2024
ஆரோக்கிய பால் திடீர் விலை உயர்வு இன்று முதல் லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்கிறது
அரசின் ஆவின் பால் கொள்முதல் விலை 38 ரூபாய் உள்ள நிலையில் தனியார் பால் நிறுவனங்களின் கொள்முதல் விலை 33 ரூபாய் என்ற அளவிலே உள்ளது. இந்த சூழலில் தனியார் பால் நிறுவனத்தின் விலை ஏற்றம் பொதுமக்களை கடுமையாக பாதிக்கும். இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் பொன்னுசாமி பேசுகையில்...
தனியார் நிறுவனங்களின் பால் கொள்முதல் விலைகளை நிர்ணயிக்கும் அதிகாரம் மாநில அரசின் கைகளில் இல்லை. அதற்கான அதிகாரம் மத்திய அரசின் கைகளில் இருக்கிறது இதனால் தனியார் பால் நிறுவனங்களை மாநில அரசால் கட்டுப்படுத்த இயலவில்லை. தற்போதைய பால் விலை உயர்வால் ஒருபுறம் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். மறுபுறம் பால் உற்பத்தியாளர்கள் பாலுக்கு உரிய விலை இன்றி கடுமையாக சுரண்டப்படுகிறார்கள். இதனால் தனியார் பால் நிறுவனங்களே பெருத்த லாபங்களை அடைகின்றன
தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி தனியார் பால் நிறுவனங்களை ஒரு கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் தேவையற்ற திடீர் விலையேற்றத்தில் இருந்து நுகர்வோர்களையும், உழைப்பு சுரண்டலில் இருந்து பால் உற்பத்தியாளர்களையும் நம்மால் காப்பாற்ற இயலும்
- ஷரீப். அஸ்கர் அலி