
இனிய தீர்வுகளை நோக்கி...
வந்தாச்சு ! டிஜிட்டல் மார்க்கெட்டிங்.
- By --
- Monday, 11 Nov, 2024
டிஜிட்டல் மார்க்கெட்டிங்
எலே அப்பாஸூ, இங்கே வாலே !
என்னங்க சின்னாத்தா ?
மார்க்கெட்னா தெரியும்.
இந்த காய் கறிக் கடை, உசேனா மளிகைக் கடை, ஜின்னா ஸ்வீட் கடை, மோதி கடை என எல்லாம் இருக்கும். ஆனா... இந்த "மார்க்கெட்டிங்"- ன்னா என்ன? கொஞ்சம் தெளிவாச் சொல்லேன்.
வெரிகுட் ... சின்னாத்தா. வெரிகுட். இந்த வயசிலும் புரியாத விஷயத்தைப் பத்தி, அதிலும் அடுத்த தலைமுறை கிட்டே கேட்டு தெரிஞ்சுக்க நினைக்கிறீங்க பாத்தியா. அதை பாராட்டுகிறேன்.
உம் பாராட்டெல்லாம் இருக்கட்டும். நேரா விஷயத்திற்க்கு வா !
இந்தா வந்துட்டே சின்னாத்தா.
வந்துட்டேன்.
முன்னெல்லாம் மளிகை கடைக்காரங்க வாரத்துக்கு ஒரு முறை கொள்முதலுக்கு போவாங்களே.
இப்ப ஏன் அப்படி போறதில்லே தெரியுமா ?
அட ஆமாப்பா! நானும் என் மாம் மகனும் அப்படித்தான் எண்ணெய் கொள்முதலுக்கு கரூர் பஸ் ஏறிப் போய் கொள்முதலை முடிச்சிட்டு அப்படியே ரேவதி நடிச்ச "பொண்ணு புடிச்சிருக்கு"- படம் பார்த்துட்டு வந்தோம்ப்பா!.
ஏன் சின்னாத்தா ! ரேவதிதான் உனக்கு இப்ப முக்கியமா ? முன்ன மாதிரி கொள்முதலுக்கு போறாங்களா ? இல்லீயா ? அதைச் மட்டும் சொல்லுங்க சித்தப்பூ.
இல்லீயே.
அப்படிப் போறதில்லீயே. அதான் தினம் ஒரு கம்பெனிக்காரன் கடை தேடி வந்து ஆர்டர் எடுத்து சப்ளை செய்து விடுகிறானே. அப்புறம் எதுக்கு இவங்க வேற நேர்லே போகணும். ?
ஆங்க்..... அப்படி வாங்க பாயிண்டுக்கு. இப்படி கம்பெனிக்காரன் கடைக்கே வந்து தேவையான பொருட்களையும், தன்னிடம் உள்ள புதிய பொருட்களையும் நயம் படப் பேசி விற்பனை செய்யறான் பாத்தீங்களா ? அதுக்கு பேர் தான் மார்க்கெட்டிங்.
அட இதுக்கு பேர்தான் மார்க்கெட்டிங்கா ! தேவையான சரக்குகளை டோர் ஸ்டெப்லே தர்ரது. அதானே.
அதேதான் சித்தப்பூ.
விட்றாதீங்கப் பிடிங்க..
ஆனா, இதுலேயும் இப்ப மாற்றம் நடந்துக்கிட்டு இருக்கு.
இதிலேயும் மாற்றம் வந்திருச்சா ? அப்படி என்னப்பா பொல்லாத மாற்றம் ? அதையும் கொஞ்சம் விளக்கிச் சொல்லேன்.
இரீங்க சொல்றேன்.
முன்ன எல்லாம்,
நம்ம ஊர்க்காரங்க லைனுக்கு போறப்பே கையிலே சாம்பிள் சரக்குகளோடு போய், ஆர்டர் எடுத்து பின்னே சப்ளை செய்வார்கள் அல்லவா ?
ஆமா... நானெல்லாம் அப்படித்தான் தமிழ் நாடு முழுக்க சுத்தி வந்தேன்.
ஆனால், இப்ப ஜவுளி, ரெடிமேட், செப்பல், - என எல்லா ஐட்டத்தையும் அப்படியே போட்டா பிடிச்சு லேப்டாப்லையும் செல்போன்லையும் அப் லோடு செய்து கிட்டு, இரண்டு, மூன்று லைவ் பீஸ்களை மட்டும் கையில் வச்சுக்கிட்டு அதே போல ஆர்டருக்கு கிளம்பி விடுகிறார்கள். அதே போல, பழைய படியே பக்காவாக ஆர்டர் எடுத்து சப்ளை செய்து விடுகிறார்கள். அப்படியே, கொஞ்ச நாட்களுக்கு பிறகு நேரில் போகாமல்,
அதே ஆர்டர்களை செல்போனில் படங்களை அனுப்பி வைத்தே, ஆர்டர் எடுத்து விடுகிறார்கள். அதாவது பஸ் ஏறி, ரயில் ஏறிப் போகாமல் - உட்கார்ந்த இடத்திலேயே இருந்து கொண்டே , தொலை தூர ஊர்களில் உள்ள கடைகளில் ஆர்டர் எடுத்து விடுகிறார்கள். இதற்குப் பெயர்தான் "ஆன்லைன் மார்க்கெட்டிங்". இன்னும் ஷர்ப்பா சொல்லணும்னா "டிஜிட்டல் மார்க்கெட்டிங்".
எலே.... அப்பாஸூ. இந்த செல்போன்லே இத்தனை வேலைகள் எல்லாம் நடக்குதா ? ஆமா... நேர்லே போய் சாம்பிள் காட்டினாலே கடைக்காரர்களுக்கு திருப்தி வராது. நம்ம பொருளை திருப்பி, திருப்பி பார்ப்பாங்களே.
இப்ப போட்டாவை அனுப்பி வச்சு எப்படி அவர்களை சரிகட்ட முடியும் ?
சரியான கேள்வி கேட்டீங்க சித்தப்பூ.
இந்த டிஜிட்டல் மார்க்கெட்டிங்- ஐ இன்னும் துல்லியமா செய்யறதுக்குன்னே இப்ப ஆட்கள் வந்துட்டாங்க.
அட... அப்படியா ! இதுக்கு கூட ஒரு ஆளா ?
ஆமா சித்தப்பூ. இப்ப நம்ம கடைக் கணக்கு வழக்குகளை, இன்கம் டாக்ஸ்களை, விற்பனை வரிகளை எல்லாம் ஆண்டுக்கு ஒரு முறை சரி செய்து கொடுத்து, அப்பப்ப நம்ம சந்தேகத்தை தீர்க்கிறதுக்கு ஆடிட்டர் வச்சிருக்கோம் இல்லையா ! அது போல, நம்மோட டிஜிட்டல் மார்க்கெட்டிங் வேலைகளை முழுக்கவும் பார்த்துகிட்டு, சரியா வழி காட்டுவதற்கு பக்காவான தொழில்நுட்ப வல்லுனர்கள் வந்து விட்டார்கள்.
இப்ப இவங்க வந்து என்ன செய்வாங்க அப்பாஸூ ?
நம்ம கம்பெனியின் விசிட்டிங்க் கார்டு டிசைனில் தொடங்கி, நம்ம சாம்பிள்களை வண்ணமயமாக படம் பிடித்து, அதை பக்காவாக லேஅவுட் செய்து கம்யூட்டரில் ஏற்றி, அப்படியே நம்ம ரெகுலர் கடைக்காரர்களுக்கு அனுப்பி வைத்து விடுவார்கள். அத்துடன், இன்னும் பல புதிய ஊர்களில் உள்ள புதிய கடைகளுக்கும் அனுப்பி வைப்பார்கள். அதே போல, ஓவர்ஸீஸ் ஆர்டர் எனப்படும் வெளிநாட்டு ஆர்டர்களுக்கும் ஏற்பாடு செய்வார்கள்.
இதிலே நம்ம வேலைகள் என்னென்னா?
தரமான பொருட்களை தயாரித்தோ அல்லது தயாரிக்கும் இடங்களில் இருந்து வாங்கியோ கை இருப்பில் வைத்துக் கொள்ளவது. பிறகு அவற்றை, டிஜிட்டல் முறையில் மார்க்கெட்டிங் செய்யவது.
இதற்கான அத்தனை தொழில்நுட்ப உதவிகளையும் இந்த வல்லுனர்கள் நமக்கு செய்து தருவார்கள்.
இத்துடன், புதிய லோகோ டிசைனிங்க், வெப் டிசைனிங்க், உள்ளம் கவரும் விளம்பர வாசகங்கள், முகநூலில் சந்தைப்படுத்துதல்,- என பல்வேறு நவீன அவதாரங்களையும் இவர்கள் நமக்காக செய்து தருவார்கள்.
என்ன அப்பாஸூ. நீ சொல்றதைப் பாத்தா, இந்தக் கம்பெனி சென்னை போன்ற பெரிய ஊர்களில் தான் இருக்கும் போலத் தெரியுதே.
அதெல்லாம் இல்லே சின்னத்தா. நாம எதுக்கு அவ்வளவு தூரம் போகணும் ?
அப்புறம் பின்னே! திருச்சிலே இருக்கா ? இல்லே மதுரையில் இருக்கா ?
அங்கேயும் போக வேணாம்.
அப்புறம் கரூர், திண்டுக்கல் ?
ஊஹூம்....
அட என்னப்பா சோதிக்கிறே ! பட்டுன்னு சொல்லப்பா !
ம்...ம்... நம்ம ஊர்லே இருக்கு சித்தப்பூ. நம்ம ஊர்லே இருக்கு. ஐ.டி படிப்பு படிச்ச பசங்க நிறைய பேர் இந்த டிஜிட்டல் மார்க்கெட்டிங் வேலைகளை செய்து தருகிறார்கள்.
நம்முடைய வியாபாரம் சார்ந்த கணக்கு என்றால் ஆடிட்டர்- ட்டே போகிறோம்.
வழக்கு என்றால் வக்கீலிடம் போகிறோம்.
அதே போன்று "டிஜிட்டல்"- வேலை என்றால் ஐ.டி படிப்பு படிச்ச நம்ம ஊர் பசங்களிடம் போக வேண்டியது தான்.
????
பனைமரத்து அப்பாஸ்.