1000909080

மக்கள் விரோத நடவடிக்கை

உலகின் மிகப் பெரிய ஊதாரித்தனம்

டெல்லி: 
பண மதிப்பிழப்பு நடவடிக்கை இந்திய மக்கள் மறக்க நினைக்கும் நிகழ்வு. ஆட்சியாளர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்திய நிகழ்வு.

2016 நவம்பர் 8 ஆம் தேதி இந்திய வரலாற்றில் யாராலும் மறக்க முடியாத நாள். பிரதமர் நரேந்திர மோடி மக்களிடம் உரையாற்ற போகிறார் என்று அறிவிப்பு வெளியானது. இரவு மக்களிடம் பேசிய மோடி, இனி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்.

அதற்கு பதிலாக புதிதாக 2,000 ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்துவதாக அறிவிக்கப்பட்டது. மக்களிடம் உள்ள 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் ஒப்படைத்து 2,000 ரூபாய் நோட்டுகளாக வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவித்தனர். கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெருமிதம் தெரிவித்தனர்.

ரஜினிகாந்த் தொடங்கி ஆர்.ஜே. பாலாஜி வரை பல பிரபலங்கள் இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால் இந்த நடவடிக்கையால் சாமானிய மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். தற்போது போலவே அந்த நேரத்தில் அமெரிக்க தேர்தல் முடிந்து டொனால்ட் ட்ரம்ப் அதிபராக பதவியேற்றிருந்தார்.

உலகம் முழுவதும் அது பேசுபொருளாகியிருந்தது. இந்தியாவில் மட்டும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையே தலைப்பு செய்திகளில் தொடர்ந்தது. பொது மக்கள் தங்களின் சொந்தப் பணத்தை எடுக்க வங்கிகளிலும், ஏடிஎம்களிலும் நீண்ட வரிசையில் காத்துக் கிடந்தனர். இந்திய பொருளதாரமே சீரடையப் போகிறது என்றெல்லாம் மத்திய பாஜக கூறிவந்தது.

ரூ.2000 நோட்டு .. பிரதமர் மோடி நாட்டு மக்கள் அனைவரிடமும் பொது மன்னிப்பு கேட்கணும்.. சீமான் ஆவேசம் 
"ரூ.2000 நோட்டு .. பிரதமர் மோடி நாட்டு மக்கள் அனைவரிடமும் பொது மன்னிப்பு கேட்கணும்.. சீமான் ஆவேசம் "
Backfill Promotion
ஆனால் பெரும்பாலான பணம் வங்கிகளுக்கு திரும்பிவிட்டது. அப்போது எழுந்த பல கேள்விகளுக்கு இப்போதுவரை ஆளும் தரப்பில் இருந்து பதில் வரவில்லை. திடீரென்று வெளியான இந்த அறிவிப்பு வழக்கமான பணப்புழக்கத்தை ஸ்தம்பிக்க வைத்தது. சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை இழந்ததாகவும் தகவல் வெளியானது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இது முழுக்க முழுக்க நிர்வாக தோல்வி என்று விமர்சித்தார். உலகளவிலான பல பொருளாதார வல்லுநர்களும் இந்த

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இது முழுக்க முழுக்க நிர்வாக தோல்வி என்று விமர்சித்தார். உலகளவிலான பல பொருளாதார வல்லுநர்களும் இந்த நடவடிக்கையை விமர்சித்தனர். வளர்ந்து வரும் நாடுகளில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் ஈடுபடுவது ஓட்டப்பந்தயத்தில் நன்கு ஓடிக் கொண்டிருக்கும் காரின் டயரில் சுடுவது போன்றது என்று கூ றினர்.

இன்றுடன் அந்த அறிவிப்பு வெளியாகி எட்டு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. இதுகுறித்து அப்போது மோடி சொன்ன சில கருத்துகளை பார்ப்போம். 2016 பண மதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்டபோது மோடி, புழக்கத்தில் உள்ள பணம் பெரும்பாலும் ஊழலுடன் நேரடி தொடர்பில் உள்ளது. இதனால் நாட்டின் பணவீக்கம் மோசமான பாதிப்புகளை சந்திக்கிறது. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தான் இதனால் பாதிக்கப்படுகிறார்கள்.

ஏழை மக்கள் நேர்மையாக சம்பாதித்து சொத்துகளை வாங்குவது சிரமமாக உள்ளது. இந்தப் பணம் ஹவாலா, கறுப்புப் பணமாக மாறி சமூக விரோதிகள் ஆயுதம் வாங்க பயன்படுத்தப்படுகிறது. அதை தேர்தல்களிலும் செலவிட்டு வருகின்றனர். சாமானிய மக்களின் நலன்களை பாதுகாக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறினார்.

2016 நவம்பர் 13 ஆம் தேதி பேசிய மோடி, எனக்கு இன்னும் 50 நாட்கள் மட்டும் அவகாசம் கொடுங்கள். டிசம்பர் 30 ஆம் தேதிக்கு பிறகும் நிலைமை சீரடையவில்லை என்றால் மக்கள் என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்கிறேன் என கூறியிருந்தார்.

2018 டிசம்பர் 31 ஆம் தேதி பேசிய மோடி, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இது அவசியமான நடவடிக்கை. ரயில் தண்டவாள தடத்தில் மாறும்போது அதன் வேகம் சற்று குறைய தான் செய்யும் என்றார்.

அதே மோடி 2019 ஜனவரி 30 ஆம் தேதி பேசும்போது, பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் என்ன பயன் என கேட்கின்றனர். கடந்த காலங்களை போல அல்லாமல் சுலபமாக வீடு சொத்து வாங்கும் இளைஞர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்றார். 

இப்படி ஒரு ஊதாரித் தனமான பதிலை இதுவரை உலகம் கேட்டதில்லை. 

@வடக்கு வாசல். 


Comment As:

Comment (0)