1000932607

இந்திய இறையாண்மையை காவு கேட்கும் இந்தி மொழி

LIC மீது பாயும் இந்தி மொழி

LIC- நிறுவனத்தில் இந்தி மொழி திணிப்பு. நாம் ஏன் எதிர்க்க வேண்டும்?* 
????????‍♂️ LIC காப்பீட்டு நிறுவனம் என்பது இந்தியாவின் ஆன்மா போன்றது. உலகின் மிகப் பெரிய மக்கள் தொகைதான் இதன் அடிப்படையான மூலதனம். சுமார் 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் சுமார் 40 கோடி இந்தியர்கள் இந்த LIC காப்பீட்டு நிறுவனத்தில் முதலீடு தந்து சந்தாரர்களாக தங்களை இணைத்துக் கொண்டுள்ளார்கள். இது ஒரு நாட்டின் மக்கள் தொகையை விட அதிகமான எண்ணிக்கயாகும்.  

பல்வேறு பண்பாட்டு பின்னணிகளுடன், பல்வேறு மொழி பேசும் இவர்கள் இந்தியாவின் எண் திசைகளிலும் வசித்துக் கொண்டிருக்கும் எளிய குடிமக்கள். ஆனால், இன்றைய பா.ஜ.க. அரசு இந்த சந்தாரர்கள் மீது மிகப் பெரிய மொழிப் போரினை கட்டவிழ்த்துள்ளது. 

LIC நிறுவனத்தின் இணைய தள பக்கத்தில் இந்தியை முதன்மையான மொழியாக எந்த முன் அறிவிப்பும் இல்லாமல், இரவோடு இரவாக மாற்றி அமைத்துள்ளது. இதனால், இந்தி பேசும் 7 மாநிலங்களை தவிர்த்து மீதமுள்ள 25 மாநிலத்து சந்தாதாரர்களும் கடுமையாக பாதிக்கப் படுகிறார்கள். 

டில்லி அரசின் இந்த அதிகார அத்துமீறல்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வரையிலான  தமிழ்நாட்டின் முதன்மையான அரசியல் தலைவர்கள் தமது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்கள். 
இந்த சூழலில், தமிழ் நாடு மற்றும் இந்தியாவில் உள்ள இந்தி பேசாத பிற மாநிலத்து மக்களும், அரசியல் தலைவர்களும், கல்வியாளர்களும், வணிகர்களும் இந்த கடும் இந்தி திணிப்பிற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும். மீண்டும் அதே ஆங்கில மொழிக்கு LIC யின் இணையப் பக்கத்தின் முகப்புகளை மாற்ற வேண்டும் என பா.ஜ.க அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். இதற்கான எழுச்சி மிக எதிர்ப்புகள் இந்தியாவின் எண் திசைகளில் இருந்தும் எதிரொலிக்க வேண்டும். 

இது வெறும் மொழிப் பிரச்சனை மட்டுமல்ல. அதே போன்று LIC என்பது வெறும் காப்பீட்டு நிறுவனம் மட்டுமல்ல.  

LIC காப்பீட்டு நிறுவனத்திற்கும் இந்திய துணைக் கண்டத்தின் உருவாக்கத்தில் அதன் முதன்மையான பங்குகள் குறித்தும் இன்னும் விரிவாகப் பேசுவோம். 

????

 *வண்ணப்பலகை*
  (20, நவம்பர், 2024). 

????????‍♂️


Comment As:

Comment (0)